கீழடி,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மார்ச் -18 தேதி முதல் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கீழடியில் 11ம் கட்ட அகழாய்வின் போது சுடுமண் குழாய்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இருவேறு வடிவிலான சுடுமண் குழாய்கள் ஒரே குழியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இன்றைய அகழாய்வு பணியின்போது முன்னதாக வித்தியாசமான வடிவில் வட்டவடிவிலான பானையின் மேற்பகுதி சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளி நாகரிகத்திற்க்கு இணையான தொன்மையான செங்கல் கட்டுமாணங்கள் கீழடியில் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.