தமிழக செய்திகள்

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றம்?

கேசவ விநாயகத்தை ஆர்.எஸ்.எஸ். பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் கேசவ விநாயகம். இவர் 2015ம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இடையே பாலமாக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ் - பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த அலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகத்தை விடுவித்து அவரை ஆர்.எஸ்.எஸ். பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு எடுக்கப்படுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பை பாஜக - ஆர்.எஸ்.எஸ். கூட்டுத்தலைமையின்கீழ் கொண்டுவரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.