சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்று, பிரதமர் மோடியின் தலைமையில் கிசான் சம்ரிதி தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கிசான் கல்யாண் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, இந்த முன்னெடுப்பு வேளாண் துறையில் ஒரு முழுமையான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
முழுமையான வளர்ச்சி, நவீனமயமாக்கல், அறிவியல் முன்னேற்றங்கள், தன்னிறைவு மற்றும் திறன்மிக்க விவசாயிகளின் தலைமுறையை உருவாக்குதல் ஆகியவை இந்த மாற்றத்தின் மையமாக உள்ளன. நமது பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் விவசாயிகளின் நலனை மேலும் வலுப்படுத்துவோம். ஜெய் கிசான்! ஜெய் பாரத்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.