தமிழக செய்திகள்

கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிட அனுமதி

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 இடங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொடைக்கானலில் மே 31-ந்தேதி வரை 4 சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம். தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களை கட்டணமின்றி காணலாம்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சாலை போக்குவரத்தினை எளிதாக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சுற்றுலா தலங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.