கொடைக்கானல் 
தமிழக செய்திகள்

குளிர்காலத்தில் ரம்மியமாகக் காட்சியளிக்கும் கொடைக்கானல்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

பகல் நேரங்களிலும் நிலவும் இதமான குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக, மலைச் சிகரங்கள் மேகக் கடலில் மிதப்பது போன்ற அற்புதத் தோற்றத்தை அளிக்கின்றன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைத்தொடர்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், கடல் அலைகள் போல மலை முகடுகளைத் தழுவிச் செல்லும் வெண்மேகங்களின் ரம்மியமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேகக் கடலில் மிதக்கும் மலைகளின் இளவரசி

திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்திய மழை மற்றும் குளிரின் தாக்கத்தால் 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானல் பள்ளத்தாக்குகள் முழுவதும் பஞ்சு போன்ற வெண்மேகக் கூட்டத்தால் சூழப்பட்டுக் காட்சியளிக்கின்றன. பகல் நேரங்களிலும் நிலவும் இதமான குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக, மலைச் சிகரங்கள் மேகக் கடலில் மிதப்பது போன்ற அற்புதத் தோற்றத்தை அளிக்கின்றன.

இணையத்தில் வைரலாகும் ட்ரோன் காட்சிகள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வெண்மேகங்கள் கடல் அலை போலப் படர்ந்து செல்லும் வான்வழி ட்ரோன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளன.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள், கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக் மற்றும் குணா குகை உள்ளிட்ட இடங்களில் இந்த ரம்மியமான சூழலைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT