சென்னை,
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொளத்தூர் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு வியாழக்கிழமை மதியம் 2.24 மணிக்கு காலமானார் செய்தியை அறிந்து மரணமுற்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
வி.எஸ்.பாபு எனக்கு நெருங்கி நண்பர் அவரை நீண்ட காலமாக எனக்கு நன்கு அறிமுகம். அவர் துடிப்பானவர். அவர் சிறிது காலமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் என்பதை அறிந்து அவர் உடல் குறித்து அவ்வப் போது நலம் விசாரித்து வந்தேன். அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றினார். அவரது பணி மிகவும் மகத்தானது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ஆத்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது சார்பிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.