தமிழக செய்திகள்

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா... 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

கொல்கத்தா அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியில் அபிஷேக் போரேல் 22 ரன்களில் வெளியேறினார். ஷகீல் பரக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் சவுரப் துபே 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் பின் ஆலன் களமிறங்கினர். இதில் பின் ஆலன் 20 ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணீஷ் பாண்டே, 25 ரன்களில் கேட்ச் ஆனார். மறுபுறம் நிலைத்து நின்று அரைசதம் கடந்த ரஹானே, 63 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ரோவ்மன் பாவெல் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் டெல்லி அணி 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது. இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை டெல்லியும், கொல்கத்தாவும் ஏற்கனவே இழந்துவிட்டன. பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு, குஜராத், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றிருப்பது குறிப்பிட்டத்தக்கது.