சிறுத்தை 
தமிழக செய்திகள்

கோத்தகிரி: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி

தானியங்கி கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மலைகள் சூழப்பட்ட பகுதிகளாகும். எனவே இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி ,சிறுத்தை போன்ற வனவிலங்குக்கள் அதிகம் உள்ளன. மேலும் இந்த விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கோத்தகிரி விநாயகர் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இருந்த ஒரு வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

தப்பியோடிய சிறுத்தை

சிறுத்தை வருவதைக் கண்ட இரும்பு கூண்டிற்குள் இருந்த வளர்ப்பு நாய் கடுமையாக குரைக்கத் தொடங்கியது. நாய் கூண்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதையும், அதன் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக் கொள்ளக்கூடும் என்பதையும் உணர்ந்த சிறுத்தை, அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்தது. இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து, செல்லப் பிராணிகளை வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதனால் வனத்துறையினர் இப்பகுதியில் தானியங்கி கூண்டுகளை வைத்து அச்சுறுத்தும் சிறுத்தையைப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT