கோவில்பட்டி:
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் ஜே.சி.ஐ. இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கே. பி. எம். மகேஷ் முன்னிலை வகித்தார். வரலாற்று துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ், ஜே.சி.ஐ. தலைவர் தீபன் ராஜ், செயலாளர் சூர்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முகாமில் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், டாக்டர் தேவசேனா தலைமையில் மருத்துவக் குழுவினர் 70 மாணவ- மாணவிகளிடம் ரத்த தானம் பெற்றனர். உதவி பேராசிரியர் சதீஷ் பாலகுமாரன் நன்றி கூறினார்.