தமிழக செய்திகள்

கோவில்பட்டி: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது அத்தை வீட்டில் தங்கி கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மது அருந்தும் பழக்கத்தால் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கேட்டரிங் வேலை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாதவன் (வயது 23). இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், மாதவன் தனது அத்தை மாரியம்மாள் வீட்டில் தங்கி கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த சில நாட்களாக மாதவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கடும் மதுபோதையில் இருந்த மாதவன், வீட்டின் அருகே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாதவனின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT