தமிழக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா: உறியடி பானை பொருட்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

உறியடி பானையில் இருந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இதில் நடைபெற்றது. உறியடி நடந்தது. உறியடி பானையில் தேங்காய், 5 எலுமிச்சம் பழங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டன. உறியடி பானையில் இருந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

புளியங்குடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஒரு தேங்காயை ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அதேபோல 5 எலுமிச்சம் பழங்கள் ரூ.3.70 லட்சத்துக்கும், மஞ்சள் கயிறு ரூ.70 ஆயிரத்துக்கும், வடக்கயிறு ரூ.65 ஆயிரத்துக்கும் உள்பட மொத்தமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலம் விடும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT