தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி: 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

வானிலை மாற்றத்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி,

சுமார் 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதமடைந்ததால் பயிரிட்ட விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் பருவமழையை நம்பி விவசாயிகள் 30,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டனர். அதற்கு மாறாக ஏற்படுகின்ற வானிலை மாற்றத்தால் பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. கோடை காலத்தில் மழையும், பருவமழை காலத்தில் வெயிலும் நிலவி வருகிறது. இதனால் பருவமழையை நம்பி பயிரிட்ட 90 சதவீத நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் சேதமடைந்துள்ளன.

விவசாயிகள் கவலை

கஷ்டப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யும் நேரத்தில் வறட்சியால் சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதனால் வேளாண் துறை அதிகாரிகளும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து வறட்சியால் வாடிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.