தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி: பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் சாவு

மாணவன் பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நந்தகுமார் அங்குள்ள பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவன் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மாண வன் நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.