கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கே.எஸ்.அழகிரி மனைவி மறைவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா சென்னையில் உள்ள தனியா மருத்துவமனையில் நேற்று காலமானா.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானா.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கே.எஸ்.அழகிரியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது மனைவி வத்சலா மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக நேற்று (11.1.2026) முதல்-அமைச்சர், உயிருக்கு உயிராக, பக்கத்துணையாக இருந்த வாழ்விணையரை இழந்து வாடும் சகோதரர் கே.எஸ். அழகிரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT