தமிழக செய்திகள்

சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு

திண்டுக்கல்லில் மகளிர் தின விழாவையொட்டி சாதனை படைத்த பெண்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம், திண்டுக்கல் மெஜஸ்டிக் அரிமா சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, நாட்டாண்மை காஜாமைதீன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பாராட்டி பரிசு வழங்கினா. இதில் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், அரிமா சங்கத்தை சேர்ந்த நந்தகோபால், அழகர்சாமி, சகாய செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.