தமிழக செய்திகள்

குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் சாமி தரிசனம்

குலசேகரன்பட்டினத்தில் உலகப்புகழ்பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது.

தூத்துக்குடி,

குலசை முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர்கள் ரமேஷ், ஸ்ரீநாத் சாமி தரிசனம் செய்தனர்.

குலசை முத்தாரம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலகப்புகழ்பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ்பெற்றதாகும். அந்த வகையில் நடப்பு ஆண்டு தசரா திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்காரம் வரும் 20ம் தேதி இரவு குலசை சிதம்பரேவரர் கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. தசரா திருவிழா நெருங்கி வரும் நிலையில் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் சாமி தரிசனம்

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஸ்ரீநாத் இன்று குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், தசரா திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT