தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான தீபாராதனை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT