தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று அதிகாலையில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காளி பூஜை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழ இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று காளி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதிஹோமம் நடந்தது. காலையில் விநாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 108 சங்கு பூஜை, 108 கலச பூஜையை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு காளி பூஜை நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா சென்று கோவிலுக்கு வந்த பின்னர் 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT