சூரசம்ஹாரம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) நள்ளிரவு நடைபெறுகிறது.21-ந் தேதி மாலை கொடியிறக்கம், காப்பு களைதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் உள்ளிட்ட உலோகப் பொருட்களை கொண்டு வரக்கூடாது. கடவுள் படங்கள், பக்திப் பாடல்கள், கட வுள் தொடர்பான வாசகங்கள் கொண்ட ஆடைகளை பயன்படுத்த தடையில்லை.
அதேவேளையில், சாதி அடையாளங்களுடன் கூடிய கொடிகள், தொப்பிகள், ரிப் பன்கள் மற்றும் சாதி அடிப்படையிலான ஆடைகளை அணிந்துவர அனுமதி யில்லை. போலீசாரை போன்று சீருடை அணிந்து வேடமணியவும் தடை விதிக்கப்பட்டுள் ளது. அநாகரிகமாக நடந்து கொள்வது, ஆபாசமாக நடனமாடுவது, அதிக ஒலி எழுப்பும் வகையில் இசைக்கருவிகளை இசைப்பது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது, சாதி தொடர்பான முழக்கங்கள் எழுப்பக்கூடாது.விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீசா ரின் முன் அனுமதியின்றி கோவில் பகுதி அல்லது பொது, தனியார் இடங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. ஆபாசமான ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தசரா குழுவினர் முக்கிய சந்திப்புகளில் நீண்டநேரம் வாகனங்களை நிறுத்தி வாணவேடிக்கை நடத்தவோ, நன்கொடை வசூலிக்கவோ, இசைக் கருவிகளை இசைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.
திறந்த வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையில் பக்தர்களை ஏற்றிவர அனுமதி இல்லை. இதை மீறுவோர் மீது மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையா ளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதியின்றி சாலையோரங் களில் கடைகள் அமைக்க கூடாது. திருவிழாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்து வதற்காக போலீஸ் சார்பில் தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. தாற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் வாகனங்களை ஒழுங்காக நிறுத்துவதுடன், பிற வாகனங்கள் செல்வ தற்கு போதிய இடம்விட வேண்டும். வாகனங்களை சுற்றி கொட்டகைகள் அமைக்கவும் அனுமதி இல்லை.மழை அதிகமாக பெய்யும் சூழலில், சாலை களில் வாகனங்களை நிறுத்தாமல் போலீசார் மேற்கொள்ளும் மாற்று ஏற்பாடுக ளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.