தமிழக செய்திகள்

அவிநாசி சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி: எல்.முருகன்

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் இல்லத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடினேன் என்று இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

கோவை,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இன்று, கோவை வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெக்கலூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம் கிராமங்களில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் இல்லத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடினேன்.

கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றியதற்காக அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டேன்.

மற்றொரு எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவை வடக்கு மாவட்டம் - அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தண்ணீர்பந்தம்பாளையம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் செய்து வரும் சகோதரர் தமிழ் அன்புவை சந்தித்து கலந்துரையாடினேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.