சென்னை,
தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேகரை முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக, முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று, சென்னை மக்கள் பவனில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடினேன்.
மேலும், அவருக்கு எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.