சென்னை,
மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்திற்குள்ளாகவும் வெளிமாநிலங்களையும் இணைக்கும் வகையில் இயங்கும் விரைவு ரெயில்கள் , பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சில ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய ரெயில் மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன்.
அந்த கோரிக்கைக்கு இணங்க, ராமேஸ்வரம் முதல் அயோத்தியா வரை இயங்கும் விரைவு ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும், மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை இயங்கும் விரைவு ரெயில் போத்தனூர் ரெயில் நிலையத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை இயங்கும் கோவை விரைவு ரெயில்திருவள்ளூர் ரெயில்நிலையத்திலும் நின்று செல்லும் என மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பொதுமக்களின் பயண வசதிகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் அமையும். தமிழக மக்களின் தொடர்பான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.