சென்னை,
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
இதனை தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.