தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நீடாமங்கலம் அருகே உள்ள சோணாப்பேட்டை கிராமம் பெரியார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சுதா (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்வத்தன்று வீட்டில் தனது சேலையில் தூக்குப்போட்டு சுதா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்