தமிழக செய்திகள்

சூளகிரி அருகேஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் சொந்த உபயோகத்திற்காக அந்த ஏரியை ஆக்கிரமித்து ராட்சத குழாய்கள் பொருத்தி பாதை அமைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்த புகார் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு சென்றது. அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், சூளகிரி போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.

SCROLL FOR NEXT