தமிழக செய்திகள்

நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம்: குழு அமைத்து தமிழக அரசு அரசாணை

நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை

நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதமரின் திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது.

மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தது. அதைப்போல, இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதன் அடிப்படையில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதமர் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலரும், உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரும் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT