நெல்லை,
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதியில் நேற்று விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதையொட்டி திருவனந்தபுரம் -நாகர்கோவில் இடையே உள்ள ரெயில் பாதையில் நெய்யாற்றின் கரை பகுதி தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் குருவாயூர் -சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் கிடந்த மண் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் காலை 8.55 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வரவேண்டிய குருவாயூர் -சென்னை ரெயில் 4 மணி நேரம் தாமதமாக 1 மணி அளவில் நெல்லை சந்திப்புக்கு வந்தது. பின்னர் 1.17 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இயக்கப்பட்டன.
இதே போல் திருவனந்தபுரம் -திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு பிற்பகல் 2.25 மணிக்கு பதில் 1.12 மணி நேரம் தாமதமாக 3.37 மணிக்கு வந்து, 4 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்றது. இதே போல் பல்வேறு ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.