தமிழக செய்திகள்

மொழிகள் இனி தடையில்லை – கூகுள்-ன் புதிய ஏஐ சேவை!

70-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

புதிய செயற்கை நுண்ணறிவு

உலகளாவிய தொடர்பை மேலும் எளிதாக்கும் வகையில், கூகுள் நிறுவனம் ஜெமினி 3.5 நேரலை மொழிபெயர்ப்பு (“Gemini 3.5 Live Translate”) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பு அம்சம்

இந்த புதிய தொழில்நுட்பம், மனிதர்களின் உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது. குறிப்பாக பேசுபவர்களின் குரல், உணர்ச்சி மற்றும் உரையாடல் பாணியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது இதன் சிறப்பு அம்சமாகும்.

70-க்கும் மேற்பட்ட மொழி

70-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் மனிதர்கள் எளிதாகவும் இயல்பாகவும் உரையாட முடியும் என நம்பப்படுகிறது.

கூகுள் மீட் , கூகுள் தேடல், மற்றும் கூகுள் டிரான்ஸ்லேட் ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தொடர்பு தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.