தமிழக செய்திகள்

சதுரகிரி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சனி பிரதோஷம் இன்று ஆனி மாத பவுர்ண மியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராம நாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

பின்னர் இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வகையான அபிஷேகம் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடித்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

இதே போன்று சந்தன மகாலிங்கம் சாமிக்கு அபி ஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. மொட்டை உள் ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். நாளையுடன் நான்கு நாள் அனுமதி முடிவடைகிறது.