தமிழக செய்திகள்

“ஐ.சி.யூ.-வில் சட்டம் - ஒழுங்கு: கோமாவில் ஆட்சி நிர்வாகம்” - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்கு பொறுப்பே இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐ.சி.யூ.-வில் சட்டம் - ஒழுங்கு உள்ளதாகவும், கோமாவில் ஆட்சி நிர்வாகம் இருப்பதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆபாசக் குறுஞ்செய்தி

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சட்டம் - ஒழுங்கு ஐ.சி.யூ.-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!

* ஒரே நாளில் 17 கொலைகள்!

* குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!

* பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!

பொறுப்பே இல்லை

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை!

காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!

த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!

மொத்தத்தில், Part-time முதல்-அமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்கு பொறுப்பே இல்லை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT