தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை: முதல் அமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

சென்னை,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலர், காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை பற்றியும், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து குற்றங்களை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில், இதனை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், முதல் அமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.