தமிழக செய்திகள்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - ஓபிஎஸ் கடும் விமர்சனம்

நேற்று ஒரே நாளில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை,

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என ஓபிஎஸ் கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் உள்பட திருச்சியில் 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும் சென்னை, திருவள்ளூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு தலைவர்கள் பலரும் தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்த்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT