சென்னை,
அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.அந்த கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் என பிரிந்து அந்த மோதல் சட்டசபையிலும் வெடித்து இருக்கிறது. தனக்கு தான் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் பதவி என்று எடப்பாடி பழனிசாமியும், ஆனால் நான் தான் தலைவர். எனக்கு அதிகபெரும்பான்மை இருக்கிறது என்று கூறி வேலுமணியும், தனித்தனியாக தற்காலிக சபாநாயகர் கருப்பையாவி டம் மனு கொடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் சபாநாயகர் எந்த முடிவு எடுப்பார்? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் கட்சித்தலைமை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆகிய இரண்டுமே மிக முக்கியமானவை. பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூடி ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள். இவரே சட்டமன்றத்தில் அந்தக் கட்சியின் குரலாக இருப்பார்.
இந்த பதவிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் அல்லது உயர் மட்டக்குழு ஒருவரை பரிந்துரைக்கலாம். இறுதியாக அந்த பரிந்துரையை எம்.எல்.ஏ.க்கள் ஏற்று, முறைப்படி தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் (தலைமை) ஒரு கடிதத்தையும், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் மற்றொரு கடிதத்தையும் அளித்தால், அது ஒரு தலைமை போராட்டமாக உருவெடுக்கும்.
இதில் இறுதி முடிவை சட்ட மன்ற சபாநாயகர் எடுப்பார். அதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சபாநாயகர் முதலில் அந்தக்கட்சியின் சட்டவிதி முறைகளை ஆய்வு செய்வார். அந்த கட்சித்தலைமைக்கு. சட் டமன்ற கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் உள்ளதா? என்று பார்ப்பார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பல தீர்ப்புகள், குறிப்பாக மராட்டிய அரசியல் விவகாரத் தில் யார் தலைவர் என்பதை தீர்மானிப்பதில் “அசல் அரசி யல் கட்சி" எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறியுள்ளன.
அதாவது, வெறும் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சேர்ந்து ஒரு வரை நியமிக்க முடியாது. அதற்கு கட்சித்தலைமை அங்கீகாரம் அளிக்க வேண்டும். எப்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறும் என்றால், அவர்கள் இரண்டில் மூன்று பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களுடன், அதாவது அ.திமு.க.வில் உள்ள 47-ல் 32 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று. "நாங்கள் தான் அசல் கட்சி" என்று உரிமை கோரும்போது அல்லது வேறொரு கட்சியுடன் இணையும்போது மட்டுமே.
தற்போதைய சூழலில் கட்சியின் பொதுச்செயலாளருக்குத்தான் "விப்" எனப்படும் கொறடாவை நியமிக்கும் அதிகாரமும், கட்சி யின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் அதிகாரமும் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தலைமைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக ஒருவரை நியமித்தால், அது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
ஒரு கட்சித்தலைமைதான் சட்டமன்ற தலைவரை பரிந்துரைக்கும்; ஆனால் அந்த தலைவர் சட்டமன்றத்தில் செயல்பட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியம். ஒருவேளை மோதல் ஏற்பட்டால், கட்சியின் அதிகாரப்பூர்வ "பொதுச்செயலாளர்" யாரோ, அவர் கொடுக்கும் கடிதமே சட்டப்படி வலுவானதாகக் கருதப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.