தமிழக செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டு அறை திறப்பு

24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இதனையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி இயக்குனரகத்திற்கு தேர்தல் செலவினங்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

முக்கியமாக வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக அரசியல் கட்சியினர் மொத்தமாக பணம் எடுத்து செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக வருமான வரித்துறை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. இதுதொடர்பான புகார்களை 1800-425-6669 எனும் கட்டணமில்லா தொலை பேசி எண், 94453- 94453 என்ற வாட்ஸ் அப் எண் மற்றும் tn.electioncomplaints2026@incometax.gov.in பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.