சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முறைகேடாக வெற்றி பெற்றுள்ளது.
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் எதிர்க்கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. லெனின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று திரிபுராவிலும் இடதுசாரிகளின் கட்சி அலுவலகங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் இத்தகைய அராஜகப் போக்கு, வன்முறை கடும் கண்டனத்திற்குரியது.
உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்றத் தலைவரான, உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழிகாட்டியான, மாமேதை லெனினுடைய சிலை உடைக்கப்பட்டது தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மாபெரும் தாக்குதலாகும்.
இத்தகைய தாக்குதல்களை உழைக்கும் மக்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து எதிர் கொண்டு முறியடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.