தமிழக செய்திகள்

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

இரவு நேரங்களில் சுற்றித்திரியும் சிறுத்தைகள், குடியிருப்புகளில் புகுந்து செல்லப்பிராணிகளை வேட்டையாடி சென்றுள்ளன.

நீலகிரி,

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரியும் சிறுத்தைகள் அங்குள்ள செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கோத்தகிரி அருகே கெனடா கிராமத்தில் கார் வருவதை கண்டு சிறுத்தை ஒன்று பயத்தில் ஓடியது.

இதனை காரில் பயணித்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க தகுந்த நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT