கோவை,
தீபாவளி திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்" என ஜக்கி வாசுதேவ் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:-
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில், "நம்மை சுற்றியுள்ள உலகத்தில், இருள் என்றால் வெளிச்சம் இல்லாமல் இருப்பது. நமது உள்நிலையில் இருள் என்பது தெளிவில்லாமல் இருப்பது.
இந்த தீபாவளி திருநாள் நம் சூழலில் இருக்கும் தீபங்களின் விழாவாக மட்டும் இருந்துவிடாமல், தெளிவின் உச்சத்தை - ஞானத்தை நோக்கி ஒரு படியாக அமையட்டும்," என கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.