தமிழக செய்திகள்

வெற்றி தலைவரின் வழியில் திருச்செங்கோட்டை முன்னேற்றுவோம்! - தவெக அருண்ராஜ்

தொலைநோக்கு திட்டங்களை தவெக ஆட்சியில் துல்லியமாய் செயல்படுத்துவோம் என அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னை,

திருச்செங்கோட்டில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது குறித்து தவெக நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருச்செங்கோடு தேர்தல் களத்தின் திருப்புமுனையாக அமைந்தது, நேற்று ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம்.

நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் அசாத்தியமான உரை, மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கள் தம்பி லயோலா மணி, தம்பி சம்பத்குமார், தேசிய செய்தி தொடர்பாளர் தங்கை தேன்மொழி பிரசன்னா ஆகியோரின் அதிரடியான உரை மக்களை வெகுவாக சிந்திக்க வைத்தன.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் தன்னெழுச்சியாய் திரண்டு விசிலின் வெற்றி ஒலியை உறுதிப்படுத்தினார்கள்.

திருச்செங்கோட்டுக்கு தேவையான தொலைநோக்கு திட்டங்களை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் துல்லியமாய் செயல்படுத்துவோம் என்பதை மக்கள் முன் சூளுரைத்தோம்!

வெற்றி தலைவரின் வழியில் திருச்செங்கோட்டை முன்னேற்றுவோம்!

விசில் போடு திருச்செங்கோடு...

இந்த அருண் ராஜ் என்றும் உங்களோடு..!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.