தமிழக செய்திகள்

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகநீதிக்கான பங்களிப்பை போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின்

நாட்டுக்காகவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகநீதிக்கான பங்களிப்பைப் போற்றுவோம்; சமத்துவ சமுதாயம் அமைக்க உறுதியேற்போம் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இமானுவேல் சேகரன் பிறந்தநாள்; உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் இன்று.

நாட்டுக்காகவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடிய அவரின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூகநீதிக்கான பங்களிப்பைப் போற்றுவோம். சமத்துவ சமுதாயம் அமைக்க உறுதியேற்போம்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT