தமிழக செய்திகள்

ராமசாமி படையாட்சியாரின் மக்கள் நலப்பணிகளை போற்றிடுவோம்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

ராமசாமி படையாட்சியாரின் முன்னெடுப்புகள், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுதந்​திர போராட்ட வீரரரும், முன்​னாள் அமைச்​சரு​மான ராமசாமி படை​யாட்​சி​யின் 109-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்​படுகிறது.

இந்நிலையில் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT