சென்னை,
மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவரும், போர்க்களத்தில் எதிரிகளால் எளிதில் வீழ்த்த முடியாத போர் வீரருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி உயிர்நீத்த அழகுமுத்துகோன் அவர்களின் தியாகத்தையும், அஞ்சாத துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.