சென்னை,
மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை போற்றுவோம்!
அவரை போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினை காப்போம்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.