தமிழக செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுகவை அகற்றுவோம்! - பியூஸ் கோயல்

குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 125 சதவீதம் உயர்ந்துள்ளது என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய மந்திரி பியூஸ் கோயல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அப்பாவின் ஆட்சியென்றும், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்றும் நாடகமாடிய திமுகவின் திறனற்ற ஐந்தாண்டுகால ஆட்சியில், தினந்தினம் பாதுகாப்பு பறிக்கப்பட்டு அல்லாடி வருகின்றனர் நம் தமிழ்ப் பெண்கள் என்பதை ஆதாரத்துடன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார் நமது தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு!

பெண்களுக்கு எதிரானது திமுகவின் ஆட்சி என்பதற்கு 56 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், 125 சதவீதம் உயர்ந்த குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களுமே சாட்சி! இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு இனி என்றுமே இல்லை நீட்சி!

திமுக ஆண்டது போதும்! தமிழகப் பெண்கள் துயருற்றது போதும்! பெண்கள் நிம்மதியாக வாழ திமுகவை வீழ்த்துவோம்! தமிழகம் காப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.