சென்னை,
1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அந்த ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அறிவித்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்த தியாகிகளைப் போற்றுவோம் என சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
நம் தமிழ் நிலத்தை பாதுகாத்த எல்லைப்போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். அவர்கள் வழியில் மாநிலத்தையும் - மாநில உரிமைகளையும் காத்து நிற்போம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.