கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காயிதே மில்லத்தின் பிறந்தநாளில் மதநல்லிணக்கம் காக்க உறுதியேற்போம் - அன்புமணி

தமிழ் மொழிக்கும் சமூகத்திற்கும் காயிதே மில்லத் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காயிதே மில்லத்தின் பிறந்தநாளில் தமிழை வளர்க்கவும், மதநல்லிணக்கம் காக்கவும் உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 131-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ் மொழிக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. அன்னைத் தமிழை தேசிய ஆட்சிமொழியாக அரியணை ஏற்றவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் நினைவு கூர்வோம். அவர் விரும்பியவாறு அன்னைத் தமிழுக்கு அரியணை பெற்றுத் தரவும், மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.