சென்னை,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..! வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில் இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..! விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.