தமிழக செய்திகள்

அப்துல் கலாம் கனவு கண்ட நாட்டை உருவாக்க உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். 'ஏவுகணை நாயகன்' என்று அழைக்கப்படும் அப்துல் கலாமின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசால் "இளைஞர் மறுமலர்ச்சி நாளாக" அனுசரிக்கப்படுகிறது.

அப்துல் கலாம் பிறந்தநாள்

இந்நாளில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமின்றி, இனிவரும் தலைமுறையினராலும் போற்றப்படக்கூடிய நாயகனான இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை நான் வணங்கி மகிழ்கிறேன்.

இந்தியாவின் முன்னேற்றம் தான் அவரது இலக்காக இருந்தது. அதற்காக இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளில் தான் தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை அவர் ஈடுபட்டிருந்தார். அவர் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, அவர் வகுத்துத்திட்டப்படி கடுமையாக உழைக்க அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT