கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட உறுதியேற்போம் - டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கருதி, தன் வாழ்நாள் முழுவதும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.