தமிழக செய்திகள்

தீபம் ஏற்ற எதிர்த்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று எதிர்பார்ப்போம் - தமிழிசை சவுந்தரராஜன்

ஆட்சியும் தவறு செய்திருக்கிறது ஆட்சியரும் தவறு செய்திருக்கிறார் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை,

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டித்த உச்சநீதிமன்றம்

இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் தீபம் ஏற்றாமல் இருந்ததை கண்டித்து இருக்கிறது ... நாங்கள் உங்களை ஏற்ற முடியுமா என்று கேட்கவில்லை ஏற்ற வேண்டும் என்று தான் சொன்னோம்.. காரணங்களை கேட்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.. உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்காலத் தீர்வை சொன்ன பின்பு அதற்கு பின்பு எந்த விளக்கமும் தேவையில்லை எந்த விவாதமும் தேவையில்லை நேரடியாக விளக்கு ஏற்றப்பட்டு இருக்க வேண்டும்.

என்ன நடக்கிறது என்று எதிர்பார்ப்போம்

ஆட்சியும் தவறு செய்திருக்கிறது ஆட்சியரும் தவறு செய்திருக்கிறார். அறங்காவலர் குழுவும் தவறு செய்திருக்கிறது..

இன்னும் கடுமையாக உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. மதுரை ஆட்சியர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று

ஆட்சியர் கொடுத்த மன்னிப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஒப்புதலும் இல்லை.. இதையெல்லாம் உச்சநீதிமன்றம் தமிழக அரசை பார்த்து சொன்ன நீதியின் வலிமையான வார்த்தைகள்...

நீதிமன்றத்தை அப்பட்டமாக மீறி இருக்கிறீர்கள்.. இதுதான் தமிழக அரசைப் பார்த்து உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கும் வலிமையான நீதி வார்த்தைகள்.. எதிர்பார்ப்போம் தீபம் ஏற்ற எதிர்த்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT