தமிழக செய்திகள்

ராகுல் காந்தியை பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம் - மாணிக்கம் தாகூர்

நம் மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மகத்தான இயக்கம் காங்கிரஸ் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சென்னை,

ராகுல் காந்தியைப் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம் என மாணிக்கம் தாகூர் எம்.பி. காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பொறுப்பை ஏற்க செல்கிறேன்

பதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்க செல்கிறேன். தலைவனாக அல்ல…உங்கள் தம்பியாகவும், அண்ணனாகவும், தோழனாகவும் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறேன்.

மகத்தான இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; நம் மண், மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மகத்தான இயக்கம். அந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. 2026-ல் ஆட்சியில் பங்கு பெற்றோம். இப்போது நம் அடுத்த இலக்கு – 2029.

ஒன்றிணைந்து உழைப்போம்

இந்தியாவின் ஆட்சியை மக்களுக்கு மீட்டு தந்து, நம் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்க ஒன்றிணைந்து உழைப்போம். வாங்க… இயக்கத்தை பலப்படுத்துவோம். மக்களோடு இணைந்து பயணிப்போம்.

2029 வெற்றிக்கான அடித்தளத்தை இன்று தொடங்கி அமைப்போம். ஒன்றிணைவோம்… உழைப்போம்… வெல்வோம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.